புதன், 6 ஏப்ரல், 2022

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் டிடிவி தினகரன் வழக்கில் வழக்கறிஞர் தீடீர் தற்கொலை பரபரப்பு நடந்தது என்ன???

இரட்டை இலை லஞ்சம் கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம்.. ஏப்ரல் 8ம்தேதி ஆஜராக இருந்த வக்கீல் தற்கொலை..செய்து கொண்டார் இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதுபற்றிய செய்தியாவது 

அதிமுக வில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு இபிஎஸ் ஒபிஎஸ்  டிடிவி இவர்களுக்கு ள் யார் ?அதிமுக தலைமை என அதிகார போட்டி யுத்தம் ஏற்பட்டது அதில் ஒருபகுதி அதிமுக வின் சின்னம் இரட்டை இலை இதை முடக்கவும் முயற்சி நடைபெற்றது.

அமமுக பொதுச்செயலர் தினகரன் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம், 2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது சிறையில் இருந்து வருகிறார்

 இந்நிலையில்,  சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் தனக்கு முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக' கூறியுள்ளார்.

அமலாக்கத்துறையினர் வரும் 8ம் தேதி ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் அனுப்பினர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த  வழக்கறிஞர் கோபிநாத் (31) அமலாக்கத்துறை முன்பு ஆஜராக இருந்த நிலையில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல்வட்டாரத்தில்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக