புதன், 6 ஏப்ரல், 2022

ஸ்டெர்லைட் எதிர்ப்பு திமுக அரசு தூத்துக்குடி மாநகராட்சி முதல் தீர்மானம் நிறைவேற்றுமா?

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கவுன்சிலர்கள்

ஸ்டெர்லைட் ஆலை அப்புறப்படுத்த முதல் தீர்மானம் கொண்டு வரப்படுமா? தூத்துக்குடி மக்கள்  எதிர் பார்க்கிறார்கள்.



தற்போது தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி 60 வார்டுகளில் 54 வார்டுகள் அமோக வெற்றி பெற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 20-வது வார்டில் நின்று வெற்றி பெற்ற ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி M.P. கனிமொழி முன்னிலையில் ஆணையர் சாரு ஸ்ரீ மற்றும் அமைச்சர் கீதாஜீவன், 54 கவுன்சிலர்கள் கலந்து கொள்ள மேயர் ஜெகன்  பதவி ஏற்றார்.



அடுத்து 2022 ஏப்ரல் 8 தேதி நடைபெற இருக்கும் தூத்துக்குடி முதல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.


இந்த மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரிய சாமி மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாமன்ற குழு உறுப்பினர்களும் அதிமுக உட்பட ஒருமித்த ஒரே குரலாக முதல் மாமன்ற கூட்டத்தில் முதல் தீர்மானமாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் 15 பேர் துப்பாக்கி சூடு  இறப்பு காரணமாக அமைந்த   ஸ்டெர்லைட் ஆலையை நம் நகரில் இருந்து  அப்புறப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தெரிவித்து வரும்  நம் நகர் மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.




ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு  தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், ஆலையை திறக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து இருந்தது. அந்த வழக்கு இறுதி கட்டத்தில் நெருங்கி விட்டது.


இந்நிலையில் திமுக அரசு தூத்துக்குடி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினால் கூடுதல் சப்போர்ட் டாக தெரியும் தமிழக அரசு போட்ட வழக்கும் வெற்றி பெறும் செய்வார்களா?

 கனிமொழி MP speech video

 தூத்துக்குடியில் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை திறப்பு என சிலரை தூண்டி விட்டு கையெழுத்து வாங்கி வரும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பு சார்ந்தவர்களால் தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதும் தொடர்கிறது.. இதற்கும் முற்றுப் புள்ளியாக இருக்கும்.

தூத்துக்குடி மாவட்ட கனிமொழி எம்.பி கவனிப்பாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக