தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிளைமேலாளர் தவமணி தலைமை தாங்கினார்.
IOC இயக்குநர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஓட்டுநர்களுக்கு எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மத்திய தொழிற்சங்க தலைவர் தங்கவேல் கிளைத்தலைவர் தங்கபெருமாள் கிளைச்செயலாளர் முத்துராஜ் மற்றும் ஏராளமான ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கலந்துகொண்டார்கள்..
விழிப்புணர்வு முகாம் ஏற்பாடுகளை கிளை கண்காணிப்பாளர் ஆனந்த் ஜெபராஜ் சிறப்பாக செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக