தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு பதிவு - 26-04- 2022
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா -வின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவந்ததது.
தூத்துக்குடி பொது மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதில் துப்பாக்கி சூடு 13பேர் பின்பு 2 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள்.
அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை தூத்துக்குடிமாவட்ட நிர்வாகம் காவல்துறை முலம் அடி உதை சித்ரவதை வழக்கு என ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி பொது மக்களை இம்சித்தது. ஒரு கட்டத்தில் 10 நாட்களாக தூத்துக்குடி முழுவதும் பஸ் வசதி அற்று செல்போன் இண்டர்நெட் வசதி எதுவும் இல்லாமல் கட் பண்ணி தூத்துக்குடி தனித் தீவு போல் உண்டாக்கிய கொடுமையும் நிகழ்ந்தது.
தூத்துக்குடியில் அனைத்து இடங்களிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடும் கொந்தளிப்பு. உலக தமிழர்கள் மத்தியிலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு துயர சம்பவம் எதிராலித்தது.
இதனால் தமிழக அரசு 2018 மே 28-ல் ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்து விட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடுத்துள்ளது.
தூத்துக்குடியில் 2018-ல் மூடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கடந்த 4 வருடமாக வேதாந்தா ஸ்டெர்லைட் அணில் அகர்வால் முயற்சித்து வருகிறார்
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் திட்டவட்டமாக சவால் விடுத்துள்ளார்.
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பத்திரிக்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 ஆயிரத்து 397 பேர் நேரடியாகவும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர்.
தூத்துக்குடி ஆலை மூடப்பட்டதில் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆலையை திறக்க அழைப்பு வந்தது.
ஆனால் நாங்கள் அவசரப்பட்டு எதையும் செய்ய விரும்பவில்லை. வேறு மாநிலம் செல்லலாம் ஆனால் தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறோம். நாங்கள் அங்குள்ள மக்களை விரும்புகிறோம், உள்ளூர் மக்களின் நம்பிக்கையையும் நாங்கள் பெற்றுள்ளோம். உள்ளூர் மக்கள் ஆலை திறக்கப்படுவதை விரும்புகின்றனர். ஆகவே தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என தெரிவித்தார்.
யானை வரும் முன்னே மணியோசை கேட்பது போல தூத்துக்குடி பொது மக்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்கள்.
அதிர்ச்சிக்கான மக்களின் சந்தேகங்கள்
1 தமிழக சட்டமன்றத்தில் இப்போது வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட வில்லை.
அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒத்துழைப்போடு ஸ்டெர்லைட் எதிர்ப்பு சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பொதுகூட்டத்தில் ஆவேசமாக தூத்துக்குடி பொது மக்கள் குரலை தெரிவித்த எதிர்கட்சி தலைவர் தளபதி ஸ்டாலின் அவர் முதல்வர் ஸ்டாலின் ஆகியும் இன்று வரை செய்யவில்லை. ஏன்? என்கிறார் கள்.
2
சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மன்ற தற்போது தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது (தூத்துக்குடி)இம் மண்னை விட்டு அகற்றபட வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தீர்மானம் கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமித்து நிறைவேற்றுவோம் என்று மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி தலைவர் வீரபாகு செயலாளர் S.P.S.ராஜா ஆகியோர் போர் குரல் எழப்பினார்கள்.
ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கவுன்சிலர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற முன்வரவில்லை
இதனால் அதிமுக கவுன்சிலர் கள் வெளிநடப்பு
மக்களால் கவனிக்கபட்ட விஷயமாக தெரிகிறது.
தற்போது தமிழக அரசுக்கு எதிராக துணிச்சலாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் திட்டவட்டமாக சவால் செய்துள்ளார் இதற்கு தமிழக அரசு பதில் என்ன மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் முதலில் தூத்துக்குடி எம் பி மற்றும் இதுவரை அமைதியாக இருக்காமல்.தூத்துக்குடி எல்.எம் எல்.மற்றும் மேயர் ஆகியோர் ஸ்டெர்லைட் அணில் அகர்வால் பேட்டிக்கு பதிலடி பேட்டியளித்து தூத்துக்குடி மக்களின் சந்தேக பயத்தை போக்க வேண்டும் கடமையும் உள்ளது என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக