ஞாயிறு, 6 மார்ச், 2022

இனி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தமிழக அரசை குறை கூறி பேச முடியாமல் வாயடைத்த முதல்வர்? தூத்துக்குடி சிப்காட்டில் பர்னிச்சர் பூங்கா திட்டம் முதல்வர் ஸ்டாலின் அதிரடி !!! தமிழக அரசின் 33 புதிய திட்டங்களின் மூலம் 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு


தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட்  தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூடு - 15 பேர் இறப்புக்கு பின்னர் தமிழக அரசு  ஸ்டெர்லைட் ஆலையை  சீல் வைத்து மூடிவிட்டது.தூத்துக்குடி மக்கள் நிம்மதியில் உள்ளார்கள் என்பதே நிஜம்.

ஆனாலும் ஸ்டெர்லைட் ஆலை இருந்தால் வேலை வாய்ப்பு .. வேலை வாய்ப்பு அம்புட்டு தான் போச்சு தமிழக அரசு கவனிக்க வேண்டும் என எதையோ எதிர்ப்பார்த்து ? ஒரு சிலர் தமிழக அரசை குறை கூறி பழித்து வாறு பேசி வந்தார்கள். 

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அவர்களது ஆதரவாளர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தாராகமந்திரத்தை திரும்ப திரும்ப ஒலித்து வந்தார்கள்

தற்போது சில நூறு பேரல்ல ? 

தமிழக அரசின் 33 புதிய திட்டங்களின் மூலம் 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் படி மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அதே சிப்காட் வளாகத்தில் திட்டம் வகுத்து குறைபேசியவர்கள் வாயை அடைத்து விட்டார்.

அதாவது .... 

இன்று (7-03-2022)தூத்துக்குடி சிப்காட்டில் பர்னிச்சர் பூங்கா திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.1000 கோடி செலவில் 1,150 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச பூங்கா அமைகிறது. 

தமிழக அரசின் 33 புதிய திட்டங்களின் மூலம் 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ரூ.4,755 கோடி மதிப்பீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.


தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த சர்வதேச பர்னிச்சர் பூங்கா நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.




அடுத்ததாக....

 தூத்துக்குடி SPIC நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில்அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (7.3.2022) தூத்துக்குடியில், SPIC நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 இலட்சம் ரூபாய் ம திப்பீட்டில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துஅதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாகஅமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார்.


இப்புதிய 25.3 MW DC | 22 MW AC திறன் கொண்ட மிதக்கும் சூரியமின் நிலையத்திட்டம், நவீனகால பசுமை, நிலையான தொழில்நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியை செயல்படுத்த SPIC நிறுவனத்தின்

ESG உத்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் சோலார் திட்டங்கள்

பாரம்பரிய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளை விட அதிக உற்பத்தியை வழங்குவதோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி, விலைமதிப்பற்ற தண்ணீரைஆவியாகாமல் சேமிக்கிறது. இச்சூரிய மின்சக்தி நிலையத்தில் உற்பத்திசெய்யப்படும் அனைத்து மின்சாரமும் SPIC மற்றும் Greenstar உரங்களின்உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.இந்த மிதக்கும் சூரியமின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி,அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது. சுத்தமான மின்சாரத்தை உற்பத்திசெய்வதைத் தவிர, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவியாகாமல் 60சதவீதம்கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நன்மைக்கும் இத்திட்டம் உதவுகிறது.

 இந்தத் திட்டம் இந்திய சூரிய ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கியமைல்கல் ஆகும்.

SPIC நிறுவனத்தின் மிதக்கும் சூரியமின் நிலையத் திட்டம்,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ளதொழில்களை மேம்படுத்துவதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் இலக்கை அடைவதற்கான ஒரு மைல்கல்லாகஅமையும்.


இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு

மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்

தா.மோ. அன்பரசன், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை

அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர்

நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா

ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற

உறுப்பினர்கள் சி.சண்முகய்யா, வி.மார்க்கண்டையன், ஊர்வசி

எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன்,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப.,

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், SPIC நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன், முதன்மை நிதிகே.ஆர். ஆனந்தன் மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி விசிட் 

முதல் நாள்  

6-3-2022- அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் ஆறடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.







இந்த சிலையை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக