ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஒட்டப்பிடாரம் கீழமுடிமன் பகுதியை சார்ந்த கயல்விழி என்பவரின் மகன் ஜஸ்டின் என்பவர் பணிக்கு செல்லும் போது போலீஸ் தாக்கியதில் அடிபட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக தனிநபர் ஆணைய நீதியரசர் மாண்புமிகு அருணாஜெகதீசன் 2018ம் ஆண்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரண தொகையும் வழங்க உத்தரவு பிறப்பித்தார்
ஆனால் அரசு தரப்பில் எந்த நிவாரணமும் வழங்கவில்லை
இன்று 7-03-2022 தூத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்க வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் காரில் இருந்தவாறு மக்கள் மத்தியில் மனு பெற்று வந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த போன பாதிக்கப்பட்ட ஜஸ்டின் குடும்பத்தினர் தங்களுக்கு உதவுமாறு மனுகொடுத்தார்கள். மாண்புமிகு முதல்வர் .மு.க.ஸ்டாலின் உடனே சட்டப்படியான நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை தூத்துக்குடிசமுக ஆர்வலர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அழைத்து வந்து உடனிருந்து முதல்வரிடம் மனு அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக