தூத்துக்குடி மாவட்டம் :15.03.2022
இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தாளமுத்து நகர் சிலுவை பட்டி கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.அடித்து கொலைப் செய்யப்பட்டட்டாரா? இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறப்பு - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி கடற்கரையில் இன்று (15.03.2022) காலை தூத்துக்குடி டிஎம்பி காலணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் ரத்தினசாமி (38) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜபிரபு, சரண்யா, மரிய இருதயம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து சந்தேக மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக