வியாழன், 17 மார்ச், 2022

பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி செய்தியாளர்களை சந்தித்தார் .



அப்போது அவர் கூறியதாவது:- 

இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் மிகவும் முக்கிய கடவுளும் , தமிழ் கடவுளுமாகிய முருகப்பெருமானுக்கு தமிழகத்தில்  மட்டும் இல்லாமல் உலகெங்கும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம்  திருவிழா மிகவும் விமர்சையாகவும் , மக்கள் அனைவராலும் ஒற்றுமையுடன் , மகிழ்ச்சியுடன்  கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆகையால்  மிகவும் பாரம்பரியம் மிக்க திருவிழாவான பங்குனி உத்திரம்  திருவிழா தினத்தன்று தமிழக அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசை அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும் இந்து சமய மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



மேலும் தமிழக அரசு பங்குனி உத்திரம் திருவிழாவை அனைத்து திருக்கோயில்களிலும் மிக விமர்சையாகவும் , கட்டுப்பாடுகளுடனும் , திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலனை முன்னிட்டு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து திருவிழாவை மிக சிறப்பாக நடத்திட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக