தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர்கள் 3வது வார்டு வக்கீல் முனியசாமி, 2வது வார்டு உஷா பழனிசாமி, 14வது வார்டு கொம்பையா, 1வது வார்டு கோகிலா, 19வது வார்டு மகபூப் பீவி முபாரக் ஜான், 29வது வார்டு ராமலட்சுமி,
37 வது வார்டு முருகேஸ்வரி,
41 வது வார்டு சந்திரா பொன்ராஜ், 42வது வார்டு மோகனா, 46வது வார்டு பிரெனிலா, 40 வது வார்டு லதா, 47வது வார்டு ரமேஷ், 38வது வார்டு சந்திரா செல்லப்பா,
39வது வார்டு திருச்சிற்றம்பலம், 28வது வார்டு ஹேனிஷா, 4வது வார்டு ஆறுமுகக்கனி,
11வது வார்டு நிர்மலாதேவி, 12வது வார்டு ஸ்டீபன் ஜோசப், 7வது வார்டு சேவியர் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதி க்கு சென்று அவர்களுடன் வாக்கு சேகரிப்பு கேட்டு பொதுமக்களை சந்தித்து பேசினார்.
எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு, முத்தம்மாள் காலனி, சின்னமணி நகர், சில்வர் புரம், கே வி கே நகர், மீனாட்சிபுரம், தாமோதர நகர், சிவந்தாகுளம் ரோடு, பாத்திமா நகர், காந்திபுரம், எஸ்எஸ் சம்பந்தமூர்த்தி தெரு, சிவன் கோவில் தேரடி, லயன்ஸ் டவுன், இரண்டாம் கேட், அம்பேத்கர் நகர், சக்தி விநாயகர் புரம், ஸ்டேட் பாங்க் காலனி, லூர்தம்மாள் புரம் ஆகிய பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் அதிமுக வேட்பாளருடன் வீதி வீதியாக சென்று அங்கிருந்த பொதுமக்கள் இடையே பேசி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வின் போது கழக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாநில இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா ஹென்றி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யூ எஸ் சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, முன்னாள் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேசி ,பாலஜெயம், சாம்ராஜ் மற்றும் பலரும் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக