தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
இது பற்றிய செய்தியாவது:- தூத்துக்குடி மாதா நகரில் வசித்து வரும் ரவி என்பவரின் மகன் ராமர் (வயது 20) என்பவர் கடந்த 01.02.2022 அன்று கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று அவரை குழந்தை திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இன்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு எதிரி ராமர் என்பவரை கைது செய்தார்.
மேலும் இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக