தூத்துக்குடி மாநகராட்சி வேட்பு மனு கடைசி நாள் இன்று தூத்துக்குடி மாநகராட்சி 20-வது இருக்கை பகுதிக்கு தேர்தலில் போட்டியிடும் திமுக விஜபி மேயர் வேட்பாளர் ஜெகன் வேட்பு மனு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திடீர் பரபரப்பு
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி 60-வது இருக்கை உறுப்பினர்களுக்கான தேர்தல் போட்டியிடுவர்கள் வேட்பு மனு பெறுவது இன்று 4- 2 - 2022 கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடுகிறவர்கள் அனைவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திமுக சார்பாக விஐபி மேயர் வேட்பாளர் ஆக 20-வது இருக்கை பகுதியில் போட்டியிடும் திமுக அமைச்சர் கீதாஜீவன் சகோதரர் ஜெகன் பெரியசாமி இன்று அவரது வீட்டில் இருந்து காலை 9.30 மணிக்கு கிளம்பி பழைய பஸ்ஸாடாண்ட் பகுதியில் இருந்து ஊர்வலமாக அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திமுக தொண்டர்களுடன் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வந்து சேர்ந்தார்.
அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திமுக தொண்டர்களுடன் வேட்பாளர் ஜெகன் பெரியசாமி வருகை |
அதன் பின்பு வேட்பாளர் ஜெகன் பெரியசாமி உடன் சிலர் மட்டும் மாநகராட்சி அலுவலத்தில் வேட்பு மனு செய்ய உள்ளே வந்தார்கள்..
வேட்பாளர் உட்பட பலர் முக கவசம் (மாஸ்க்) அணியாமல் வந்ததால் மாநகராட்சி வளாகத்தில் முகத்தில் அணிய முக கவசம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து (4 .02 - 2022 ) இன்று காலை 10.05 am மணிக்கு வேட்பு மனுவை திமுக ஜெகன் பெரிய சாமி தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினார்..
திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் 60-வது வார்டு களிலும் வெற்றி பெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மற்ற பகுதி திமுக வேட்பாளர் களும் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.
பரபரப்பு |
திமுக ஜெகன் பெரியசாமி இன்று காலையில் முதல் ஆளாக வந்து வேட்பு மனு செய்துவிட்டு போனதால் அப்பகுதியில் திமுக தொண்டர்கள் கூட்டம் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேதி 4-2-2022 தூத்துக்குடி லீக்ஸ்--க்காக செய்தியாளர் அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக