ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

ஒட்டு போட முடியாமல் போன தூத்துக்குடி திமுக வேட்பாளர் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் சுவாரஸ்யம்

 தூத்துக்குடி மாநகராட்சி 60- வார்டு  தேர்தல் 19-2-2022 நேற்று பரபரப்பாக நடந்தது.



அதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் 

15  வார்டு திமுக வேட்பாளர் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ இசக்கி துரை பரபரப்பில் தனது ஓட்டு கூட போட முடியாமல் விட்டுவிட்டார்.

தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை காலை 7 மணி முதல் பரபரப்பாக கண்காணித்து வாறு விறுவிறுவென்று சுற்றி கொண்டே இருந்தார் 

பின்பு தி மு க வேட்பாளர் ஒட்டு பதிவு செய்ய தனது குடும்ப உறவினர்கள் பெண்கள் உடன் ஒட்டு பதிவு செய்ய 15-வது வார்டு உட்பட்ட வாக்கு சாவடி லியோ பள்ளி க்கு வந்த போது வாக்குசாவடியில் அங்கிருந்தவர்கள் ஒட்டு போட முடியாது.

 5 மணி ஆயிற்று நேரம் முடிந்து விட்டது என கூறி உள்ளே விட அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியானார்கள்.

5 to 6 கொரானா பேஷன்ட் ஒட்டு பதிவு என கூறினார்கள். பேஷன்ட் யாரும் உள்ளே ல்லையாம்

திமுக வேட்பாளர் இசக்கி துரை உட்பட 10 பெண்கள் வாக்காளர்கள் ஒட்டு செலுத்த முடியாமல் தவித்தவாறு நின்றனர். இதனால் சலசலப்பு  

காவல் துறை  அதிகாரிகள் வர தொடங்கினர் இது பற்றி 5.45. PM தேர்தல் அதிகாரி மாவட்ட கலெக்டரிடமும்  தகவல் தெரிவிக்கப்பட்டது என்கிறார்கள்.

கடைசியில் 15 வது திமுக வேட்பாளர் இசக்கி துரை தனது ஓட்டை தனக்கே போட முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.வெற்றி பெற வேண்டும் என வார்டில் விறுவிறுப்பாக சுற்றியதில் ஒட்டு போடும்  நேரத்தை மறந்து விட்டார் என அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர்.





 


1 கருத்து: