சனி, 19 பிப்ரவரி, 2022

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் சீனியர் ரிப்போர்ட்டர் டீம் சர்வே

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 

19 - 2. 2022  இன்று சென்னை உட்பட 21 மாநகராட்சிகளிலும், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட இடங்களிலும் தேர்தல் நடைபெற்றது.



 வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி சில இடங்களில் விறுவிறுப்பாகவும் சென்னை போன்ற இடங்களில் மந்த கதியிலும் நடைபெற்றது.


கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது.

  வாக்காளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் காவல்துறையினர் அறிவுறுத்தல்கள்  வழங்கினார்கள்.நோட்டா ஆப்ஷனும் இல்லை.. விவி பேட் முறையும் இல்லை.. 


தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நோட்டாவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது 

இந்த தேர்தலில் 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.


 தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 12,838 இடங்களுக்கு, 57,778 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். 


ஒரு குடிமகன் தங்களின் தொகுதி அல்லது வார்டில், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாத பட்சத்தில் நோட்டா (NOTA - None of the above) என்ற பட்டனை அழுத்தி வாக்கைச் செலுத்தலாம்.. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன் சேர்க்கப்பட்டது.


நம் தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில்தான், முதன்முதலில் நோட்டா பட்டன் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் இடம்பெற்றது... கடந்த எம்பி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் நோட்டா பட்டன் இடம்பெற்றது.. அதாவது, வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தியதும், முன்பகுதியில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் விவி பேட் கருவியில் வாக்களித்த சின்னம், வேட்பாளர் பெயர் கொண்ட சீட்டு ரோலராக வரும்..


இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை  அதேபோல வி.வி.,பேட் கருவியும் இல்லை காரணம், உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை 2006-ல் திருத்தும் கொண்டுவரவேண்டும் என்றால், அதனை மாநில அரசு தான் செய்யவேண்டும் என்றும், தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் தேர்தல் முடிந்த பின்பு தான் அரசு திருத்தம் செய்ய முடியும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..


வாக்காளர்கள் இந்த தேர்தலில் நோட்டாக்கு வாக்களிக்க முடியவில்லை?.. அதேபோல, வாக்காளர்கள் தங்களின் வாக்கைச் செலுத்திய பின்னர், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் சீட்டும் இந்த முறை வரவில்லை... யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரியிடம் 17 -B விண்ணப்பத்தை வாங்கி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று எழுதிக்கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், அப்படி ஒருவர் எழுதிக்கொடுத்தால், வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் கட்சி உறுப்பினர்களுக்குச் சம்பந்தப்பட்ட நபர் வாக்களிக்கவில்லை என்பது தெரிந்துவிடுகிறது.. அங்குள்ளவர்கள் வெளியே சென்று பல சிக்கல்களை உருவாக்கலாம்.. பயந்தனர்.

.

பல பரீட்சை காத்திருக்கிறது.


ஒவ்வொரு மாவட்ட மாக தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி


அதிமுக. 27

தி மு க - 25

காங்கிரஸ் - 1

பிஜேபி - 1

நாம் தமிழர் - 1

மக்கள் நீதி மய்யம் 1

எஸ்.டி.பி ஜ - 1

சுயேட்சை - 3


உங்கள் வார்டில் யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது அப்பகுதி வாக்காளர் பொதுமக்கள் கேள்வி கேட்டு அவர்கள் அளித்த பதில் சர்வே -யில் தெரிவித்தாலும் ஒன்றிரண்டு  மாறுபடலாம் இதில் காங்கிரஸ்.பி ஜே பி நிலை மாறி அதிமுக-வுக்கு வந்து சேரலாம்.

ஏனெனில்? திமுக வேட்பாளர்கள் எதிராக கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் 20 பேர் களம் இறங்கினார்கள்.

அதே போல் அதிமுக வில் சீட் கிடைக்காதவர் 15க்கும் மேற்பட்டோர் களம் இறங்கியுள்ளார்கள்.

இதில் கவனிப்பில் திமுக அதிமுக இரண்டுமே சரிசமமாக ஈடு கொடுத்துள்ளதால் வாக்காளர்கள் வீட்டில் 3 என்றால் 2 இவருக்கும் 1 அவருக்கும் என்ற ரீதியில் பேச்சில் வெளிப்படுத்துகிறார்கள்.

வாக்குப்பதிவு கருவி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக