திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்பிக் நகர் பகுதி சவேரியார்புரத்திலும், ஏரல் பேரூராட்சி காந்தி சிலை, சாயர்புரம் பேரூராட்சி சுப்பிரமணியபுரம், பெருங்குளம் பேரூராட்சி பண்டாரவிளை, திருவைகுண்டம் பேரூராட்சி மேடப்பிள்ளையார் கோவில் அருகில், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி காமராஜர் சிலை, நாசரேத் பேரூராட்சி கே.வி.கே.சாமி சிலை அருகில், சாத்தான்குளம் பேரூராட்சி காமராஜர் சிலை, உடன்குடி பேரூராட்சி பாரதி திடல், திருச்செந்தூர் நகரம் வ.உ.சி திடல், ஆறுமுகநேரி மெயின் பஜார், ஆத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் .
உடன் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக