சமீபத்தில் ஹிட் அடித்த புஷ்பா திரை படத்தில் செம்மரம் கட்டை கடத்தல் தொழில் போலீஸ் க்கு டிமிக்கி கொடுத்து ஹுரோ அல்லு அர்ஜுன் கடத்துவதாக படம் முழுவதும் விறுவிறுப்பாக கதை அமைத்து இருப்பார்கள்? அந்த ஸ்டைலில் சம்பவம் நடந்து தூத்துக்குடி காவல்துறை நேற்று (10-1-2022 )செம்மரக்கட்டை பிடித்துள்ளார் கள்.
தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணைசெய்துள்ளார்கள்.
இதுபற்றிய செய்தியாவது:-
புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு யார்டில் ஒரு லாரியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப உடனடியாக சென்று சோதனையிட்டு விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
உடனே தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்
தலைமையில் தனிப்பரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், புதியம்புத்தூர் தனிப்பிரிவு தலைமை காவலர் அருள் முருகன் மற்றும் சிப்காட் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவானர் உள்ளிட்ட போலீசார் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்திலிருந்த யார்டில் நின்று கொண்டிருந்த வுN 51 மு 7099 டாரஸ் லாரியை சோதனை செய்ததில், அதில் சுமார் 20 டன் எடையுள்ள ரூபாய் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் திடுக்கிட்டு போனார்கள்.
பின்னர் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி லாரி நிறுத்தியிருந்த யார்டு ராகேஷ் 38/21 த/பெ. ஜெயராஜ், போல்பேட்டை, தூத்துக்குடி என்பவருக்கு சொந்தமானது என்றும், மேற்படி லாரி ராஜேஷ் த/பெ. கணேசன், மில்லர்புரம், தூத்துக்குடி என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் மேற்படி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின் மேற்படி போலீசார் லாரியையும், அதில் இருந்த ரூபாய் 10 கோடி மதிப்பிலான சுமார் 20 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி இன்று (10.01.2022) தூத்துக்குடி வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி லாரி நிறுத்தி இருந்த யார்டு சொந்தக்காரர் ராகேஷ் திமுக அமைச்சர் வசித்து வரும் போல்பேட்டை, பகுதியில் தான் வசித்து வருகிறார் என்பதால் நேற்று தூத்துக்குடியில் சிலர் பரபரப்பு கிளம்பி பேசினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக