செவ்வாய், 11 ஜனவரி, 2022

மதுபானபிரியர்கள் அவசியம்தெரிந்து கொள்ளவும் கொரானா தொற்று முன்னிட்டு டாஸ்மாக் மதுபானகடைகளில் புதிய கட்டுப்பாடு முழு விவரம்

 தமிழ்நாடு மாநில வாணிப கழகம் தலைமை அலுவலகம் 4-வது தளம், சி.எம்.டி.ஏ.டவர்-2, எழும்பூர், சென்னை-600 008.

ந.க.எண். R3| 2093 /2020

நாள்:11.01.2022

சுற்றறிக்கை எண். 01/2022

சுற்றறிக்கை

பொருள்: டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் கொரோனா நோய்தொற்று நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் -

தொடர்பாக.

பார்வை :

1. இவ்வலுவலக சுற்றறிக்கை எண். 10/2021, R3/2093/2020,

நாள்: 30.06.2021

2. இவ்வலுவலக சுற்றறிக்கை எண். R3/2093/2020,

நாள்: 12.11.2021

பார்வையில் காணும் இவ்வலுவலக சுற்றறிக்கைகளில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிலையான இயக்க நடைமுறைகள்

(SOP) மற்றும் கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது




அதில் குறிப்பாக:

1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது.

2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது.

4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது

முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும்.

5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்படவேண்டும்.

மேற்காணும் அறிவுரைகளை தவிர பல்வேறு கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட ஏற்கனவே இவ்வலுவலக சுற்றறிக்கைகள் வாயிலாக அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேவாளருக்கும் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலக சுற்றறிக்கையில் ஏற்கனவேதெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாது கடைப்பிடித்து சமூக இடைவெளியைபின்பற்றியும் மற்றும் மதுபானம் வாங்க வரும் வாடிகையாளர்கள் கட்டாயம் முககவசம்அணிந்தும் கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட சுற்றறிக்கை கிடைக்கப் பெற்றமைக்கான ஒப்புதலை இவ்வலுவலகத்திற்கு

அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(ஓம்/-) முனைவர். இல. சுப்ரமணியன்

மேலாண்மை இயக்குநர்

பெறுநர்:

அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், டாஸ்மாக் லிட்,

அனைத்து மாவட்ட மேலாளர்கள், டாஸ்மாக் லிட்,

நகல் :

அனைத்து அலுவலர்கள், டாஸ்மாக் லிட்,

தலைமை அலுவலகம், சென்னை-8,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக