ஜனவரி 26 குடியரசு தினம் முன்னிட்டு இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்து ம் முடப்பட்டது. இதனால் மதுப்பழக்கம் உள்ளோர் மதுவுக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடியில் சின்னகன்ணுபுரம் பகுதியில் மது அருந்தியவர்கள் குடிபோதையில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்தார்கள்.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகண்ணுபுரம் பகுதியில் செல்வராஜ் (39), த/பெ. ஆறுமுகசாமி, அண்ணாநகர், தூத்துக்குடி என்பவர் இன்று (26.01.2022) மர்ம நபர்களால் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தலைமைக் காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜா, மகாலிங்கம், சாமுவேல், காவலர்கள், முத்துப்பாண்டி, செந்தில்குமார், திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி செல்வராஜ் என்பவரை கொலை செய்தது 1) உதயமூர்த்தி (22), த/பெ. கருப்பசாமி, கேம்ப் II, தெர்மல்நகர், தூத்துக்குடி, 2) ராபின் (36), த/பெ. சண்முகவேல், பாத்திமாநகர், தூத்துக்குடி மற்றும் 3) கண்ணன் (22), த/பெ. கணேசன், நடராஜபுரம், தூத்துக்குடி மற்றும் ஒருவருடன் 4 பேர் என்பதும், இவர்கள் இன்று காலை சின்னக்கண்ணுபுரத்தில் குடிபோதையில் அவ்வழியாக சென்ற ஆறுமுகம் மகன் செல்வராஜ் என்பவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கியதில் மரணமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் மேற்படி எதிரிகள் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (27-1-2022 ) இவ்வழக்கில்தேடப்பட்ட நான்காவது நபர் வினோத் (31)த/பெ மரியதாஸ் சோட்டையன்தோப்பு மாப்பிள்ளையூரனி கைது செய்யப்பட்டார்.
மேற்படி கொலை வழக்கு எதிரிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக