புதன், 26 ஜனவரி, 2022

ஸ்டெர்லைட் திறக்க ஆயத்தம்? திடுக் தகவல் 30டன் தாமிர கழிவுகள் தூத்துக்குடியில் சிக்கியது

விரைவில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியைத் துவங்குவோம்  என ஆலையின் அசோசியேட் துணைத்தலைவர் சுமதி பரபரப்பு கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் திருட்டுத்தனமாக ..நேற்று மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த தோணியில் ரூ.2.10 கோடி மதிப்புள்ள 30 டன் தாமிரக்கழிவுகள் சிக்கியது. இது எதற்காக தூத்துக்குடி க்கு வந்தது என சுங்கத்துறை அதிகாரிகள் பரபரப்பாய் விசாரித்து வருகின்றனர்.



இது பற்றிய செய்தியாவது:-


மாலத்தீவில் இருந்து  தோணியில்30 டன் தாமிர கழிவுகள் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இதன் மதிப்பு ரூ.2.10 கோடி  தோணியில் பிடிபட்டதும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ..முறைகேடாக தோணியில் 30டன் தாமிரக்கழிவுகள் மதிப்பு 2.10 கோடி என தெரிய வந்தது.?? மேலும்  வரி ஏய்ப்பு செய்யும் வகையில் அவசரமாக குடோனுக்கு கடத்த செல்லப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

தாமிரகழிவுகளை கைப்பற்றி ய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இதனை சுங்க துறை சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே இரவு நேரங்களில் இதுபோன்று தோணி முலம் வரப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே தாமிர உற்பத்தியில் ஈடுபட்டதும் தூத்துக்குடி பொதுமக்களிடம் 

கடும்எதிர்ப்பும் அதையொட்டி 15 பேர் தூப்பாக்கி சூடு பலியான தும் நடைபெற்றது.ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசினால்  சீல் வைத்து முடப்பட்டுள்ளது.

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க ஆயத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாலத்தீவில் இருந்து தாமிர கழிவுகள் தூத்துக்குடியில் பிடிபட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை தூத்துக்குடி பொதுமக்களிடம் கிளம்பியுள்ளது.

இதில்...விரைவில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியைத் துவங்குவோம் என ஆலையின் அசோசியேட் துணைத்தலைவர் சுமதி பேசியதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாய் உள்ளது என திடுக்கிட‌ வைக்கிறார்கள்.

தூத்துக்குடி லீக்ஸ்

பதிவு 26-1-2022

செய்தியாளர் அருணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக