தூத்துக்குடி மாவட்டத்தில் அம முக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன் மற்றும் கடம்பூர் ராஜீ இருவரையும் அமுமக கட்சியினர் சந்தித்து முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு மீண்டும் அதிமுக தாய் கழகத்தில் இணைகிறோம் என தெரிவித்து வந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக
அமமுகவில் இருந்து தூத்துக்குடி முன்னாள் நகராட்சி சேர்மன் இரா.ஹென்றி முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் வாகனங்களில் அதிமுக கொடியுடன் நேற்று சென்னை சென்றனர். அதிமுக தலைமை அலுவலத்தில் இன்று 28-01-2022 அதிமுக ஒருங்கினைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் சந்தித்தார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தாய் கழகத்தில் இணைவதாக கூறி எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவோம் என தெரிவித்தார்கள். உடன் அருகில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன் - கடம்பூர் ராஜ் அருகில் உள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக