தூத்துக்குடியில் அரசு மின்சார கம்பத்தில் தனியாருக்கு சொந்தமான கேபிள் வயர்கள் கட்டப்பட்டுள்ளதால் இதை சரிசெய்கையில் ஊழியருக்கு உயிர்இறப்பு ஏற்படுகிறது .
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் R.காசிலிங்கம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவின் விவரமாவது:-
பெறுநர்
மாவட்டஅ ஆட்சித் தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி மாவட்டம்,
தூத்துக்குடி.
பொருள்:-
அரசு மின்கம்பத்தில் தனியாருக்கு சொந்தமான கேபிள் மற்றும் நெட் வயர்கள் கட்டப்படுவதால் விபத்து ஏற்படுவது
சம்பந்தமாக.
ஐயா,
தூத்துக்குடி மாநகரத்திற்குட்பட்ட டூவிபுரம் மணிநகர்.. ரோட்டில் பல மின்
கம்பங்கள் இருக்கிறது. அதில் இருந்து பொது மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு
வருகிறது.
அரசு மின்சார கம்பத்தில் தனியாருக்கு சொந்தமான கேபிள் வயர்கள்
மற்றும் நெட் வயர்கள் கட்டப்பட்டு உள்ளது.
ஆகையால் பழுது பார்க்கும் மின்சார
ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இரவு நேரங்களில் பொது
மக்களுக்கு மின்சார ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏற முடியாமல் பரிதவிக்கிறார்கள்.
ஆகையால் அவர்கள் உயிர்போக கூடிய சூழ்நிலையும் உள்ளது. அதை போல் அதே
மின்கம்பத்தில் கேபிள் வயர்கள் கட்டி இருப்பதால் கேபிள் ஊழியர்களும் பழுது
பார்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள் அவர்கள் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
11-12-2021 அன்று V.V.D ரோட்டில் இரவு 10.30 மணி அளவில் கேபில் ஊழியர்
ஒருவர் கேபிள் பழுது பார்க்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து அவர் இறந்து விட்டார்.
மின்கம்பத்தில் கேபிள் வயர்கள் |
ஆகையால் உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில்
செயல்படும் கேபிள் வயர்களை அகற்றி மின்சார ஊழியர்கள் மற்றும் கேபிள்
ஊழியர்களின் உயிரை பாதுகாத்து கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறேன்.
நன்றி!
தூத்துக்குடி
இப்படிக்கு,
R.காசிலிங்கம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
R.காசிலிங்கம் 30 வது வார்டு வட்ட செயலாளர்
106H/1, Toovipuram 2nd street,
Tuticorin - 628 003
Cell: 9841380876,98654 98656
தேதி : 13-12-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக