புதன், 8 டிசம்பர், 2021

கனிமொழிஎம்.பி.-க்கு தூத்துக்குடி பெண்கள் கோரிக்கை!!! தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை ஆக்கிரமிப்பாளர்கள் உடன் அகற்றம் நடவடிக்கை!!

 கடந்த மூன்று  நாட்களாக  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை அங்குள்ள அரசு டிரைவர் கண்டக்டர் ஆகியோரால் ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டு கும்பலாக இருந்தார்கள் .

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வேறு?  அங்கு இதுவரை செல்லவில்லை அப்படியேதான் உள்ளது

 அரசு ஓட்டுனர் நடத்துனர்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இதுதான்


நேற்றையது ஆக்ரமிப்பு


இதுபற்றி செய்தியாளர்கள் நாம் கேட்டதற்கு பெரிய இடத்தில் இருந்து அனுமதி பெற்று விட்டோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது கலெக்டரிடமோஆனணயரிடமோ.. கனிமொழி எம்பி இடமோ கேட்டுக் கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்கள்.  இதுகுறித்து செய்தி நாளிதழ் மற்றும் தூத்துக்குடி லீக்ஸ் ல் வெளியானது.


 இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ  ஆகியோர் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. 


இதன் தொடர்ச்சியாக சிலரை கடிந்ததாக கூறுகின்றனர்.  


உடனே தூத்துக்குடி பேருந்து நிலையம் அங்குள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு யாரும் செல்ல முடியாமல் பூட்டி வைத்து இருக்கிறார்கள். 

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு
 பூட்டி உள்ளது

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்  தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டி இருப்பதால் உள்ளே செல்ல முடியாமல் மதுரை கோவில்பட்டி திருச்செந்தூர் பேருந்துகளில் பயணித்து வரும் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் தவித்து கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணை கூர்ந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நல்ல நிலையில்

 அவர்களுக்கு  பாதுகாப்புடன் உதவும்படி தூத்துக்குடி பெண்கள் தரப்பில் கோரிக்கை வைக்கிறார்கள்.

தூத்துக்குடி லீக்ஸ்

பதிவு 08-12-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக