வியாழன், 30 டிசம்பர், 2021

ஹரி படங்களில் துண்டு சீன்களில் வரும் தூத்துக்குடி அதிமுக நடிகர் தி மு க வுக்கு தாவலா? போஸ்டர் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்  தற்போது ஆளும் கட்சி யாக இருக்கும் திமுகவுக்கு மற்ற கட்சிகளில் உள்ள குறிப்பாக  உறுப்பினர்கள் நிர்வாகிகள் புதிதாக இணைந்து வருகின்றார்கள்


இதற்காக கடந்த வாரம் திமுக பல வார்டுகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிய மற்றும் பிற கட்சி உறுப்பிை ர்கள் அக்கட்சியை விட்டு விலகி திமுக உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர் தூத்துக்குடி வடக்கு - தெற்கு மாவட்டங்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.



இந்நிலையில் தூத்துக்குடி அதிமுகவை சேர்ந்த வக்கீல் செங்குட்டுவன் (இவர் சினிமா இயக்குநர் ஹரி படங்களில் ரவுடி போன்ற துண்டு சீன்களில் தலை காட்டியவர்)

தற்போது திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டோ போட்டு போஸ்டர் அடித்து தூத்துக்குடியில் சில இடங்களில் ஒட்டியுள்ளார்.



திமுகவில் சேர முன்னோட்டமாக இப்போஸ்டர் தெரிகிறது என்கிறார்கள்.


விடியல் கட்சியில் மீன்வளதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் தூத்துக்குடி மேயர் வேட்பாளர் ஆக சீட் பெற்று விடலாம் என  கட்சி தாவலா?  இது டிரையல்தான் என்கிறார்கள் இதற்காக தான் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீடீரென புகழ்ந்து சுவரொட்டி ஒட்டியுள்ளார்


கடந்த வாரம் தான் தெற்கு மா.செ சண்முகநாதன் இடம் ஒரு நிகழ்ச்சியில் தான் அதிமுகவில் இருப்பதாக அவர் அருகில் போட்டோ எடுத்து கொண்டார். 

திமுகவினருக்கு போஸ்டர் ஒட்டும்

இவர் மீது அதிமுக மாவட்டம் மற்றும் தலைமை ஒருங்கினைப்பாளர் 

ஒ பி எஸ் இ பி.எஸ் -  நடவடிக்கை உண்டா 

அ தி மு க எதிர்பார்ப்பு ?


இவர் ஏற்கனவே முதலில் திமுக பின்பு மதிமுக பின்பு மா.செ பெரியசாமி முன்னிலையில் திமுக சேர்ந்தவர் பின்பு தற்போது சில வருடங்களாகஅதிமுக என்று இருக்கிறார்

தற்போது எந்த கட்சியில் உள்ளார் என்பதை வக்கீல் செங்குட்டுவன் அவர்தான் சொல்ல வேண்டும்? தலை சுற்றியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக