செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தூத்துக்குடியில் தேசிய ஊட்டச்சத்து வாரம் ஹோலி கிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய உணவு கண்காட்சி !!!! ஊட்டச்சத்து உணவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை ரூபி பெர்னாண்டோ பரிசு வழங்கல்!!!

 தூத்துக்குடியில் உணவு துறை தேசிய ஊட்டச்சத்து வாரம் விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி   ஹோலி கிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய உணவு  கண்காட்சி 07-09-2021 அன்று கல்லூரி வளாகத்தில்  நடத்தப்பட்டது. 

இது பற்றிய செய்தியாவது :-




  தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை சார்பாக தேசிய ஊட்டச்சத்து வாரவிழா  சிறப்பு உணவு கண்காட்சி நடைபெற்றது. 


 கல்லூரின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி கில்டா முன்னிலை வகித்தார். 



சிறப்பு விருந்தினராக மாவட்ட திட்ட அலுவலர் (ICDS)  தனலட்சுமி மற்றும் எழிலன், செந்தில் கண்ணன் இயக்குனர் (PALMS) ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு தொழில்முனைவோர் மற்றும் சிறந்த தொழில்முனைவோர்களாக மாற தேவையான ஆலோசனைகளை கூறினார். 



ஊட்டச்சத்து மாணவிகள் நோய் எதிர்ப்பு அதிகரிக்க கூடிய உணவுகள், பாரம்பரிய உணவுகள், விளையாட்டு ஊட்டச்சத்து மற்றும் விண்வெளி ஊட்டச்சத்து உணவுகளை தயார் செய்து கண்காட்சியை நடத்தினார்கள்.


ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் சார்ந்த அங்கன்வாடி  ஊழியர்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.  


ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் சார்ந்த ரூபி பெர்னாண்டோ  மாணவிகளுக்கு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.


 இவ்விழா ஏற்பாட்டினை துறை தலைவி அருட்சகோதரி முனைவர் ரூபா  மற்றும் துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர். இதர துறை சார்ந்த பேராசியர் மற்றும் மாணவிகள் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக