அதே ஸ்டைலில் ....தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கச்சேரி தளவாய்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் கலைச் செல்வன் (20) என்பவர் கடந்த 19.09.2021 அன்று தன்னுடைய பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சீட்டில் கேக் வைத்து அரிவாளால் வெட்டி கொண்டாடி மிரள வைத்தார்.
இதனை செல்போனிலும் வீடியோவாக ஒளிப்பதிவு செய்து பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் அவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மணியாச்சி காவல் துணை .கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து கலைச்செல்வன் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 அரிவாள் மற்றும் அதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
கத்தி சிங்கம் புலி |
ஒட்டிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் ஈடுபடுவது பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும், ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை ஆடியோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக