வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் கொள்ளையர்களே வெளியேறு என்ற முழக்கத்தோடு மனித சங்கிலி போராட்டம் தூத்துக்குடியில் இன்று 9-8 - 2021 காலை 12-வது மையவாடி எதிர் உள்ள மைதானத்தில் நடை பெற்றது.
கடந்த எட்டு மாதங்களாக போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேச திராணியற்ற ஒன்றிய அரசு , போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி தீவிரவாதிகள், குண்டார்கள் என்று அவமானப்படுத்தி பேசுவதும் ... போராட்டத்தில் இறந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகளை இறப்பின் கணக்கில் சேர்க்க மறுக்கும் ஒன்றிய பிஜேபி அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் மின்சார சட்டத்தை கைவிட வேண்டும் மற்றும் பெட்ரோல் டீசல் , டீசல் விலையில் கொள்ளையடிக்கும் ஒன்றிய அரசை வெளியேறக் கோரி மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் பாளை ரோடு VVD சிக்னல் அருகே நடைபெற்றது.
இப் போராட்டத்தில் சரவண முத்துவேல்
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் மேரி ஷீலா, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு தூத்துக்குடி மாவட்டம் , டி . பிள்ளை முத்து கருங்குளம் வட்டார விவசாயிகள் சங்கம் ,சண்முகப் பெருமான் விவசாயிகள் சங்கம் (M L) கிருஷ்ணமூர்த்தி அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் தூத்துக்குடி , இவர்கள் முன்னிலையில், வீ. கிருஷ்ணமூர்த்தி உதவி செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், எஸ். எம் ராமையா தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வழக்கறிஞர் P. சந்தனசேகர் மாவட்ட செயலாளர் AIYF, கிருஷ்ணராஜ் பொதுச்செயலாளர் ஏஐடியுசி, ரவீந்தர் தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், V. பாலமுருகன் மாநிலக்குழு சிபிஐ, அசோக்குமார் செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஓட்டப்பிடாரம், கா சுப்புதுரை செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் ஏரல் சங்கம் ஏரல், மற்றும் ஏராளமான விவசாயிகள் இந்த மனித சங்கிலியில் பங்கேற்றனர் .
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் ,தொழிலாளர் திருத்த சட்டதை திரும்பப் பெறு, நீர் நிலைகளை பாதுகாத்தல்,2020- 21 ஆண்டிற்கான பயிர் இழப்பு தொகையை உடனே வழங்கு மேலும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறு, போராடும் விவசாயிகளை அழைத்து பேசு , கடல் மீன் வள மசோதாவை திரும்ப பெறுபோன்ற கோரிக்கைகள் வலிவுறுத்தி இந்த மனித சங்கிலி நடைபெற்றது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக