செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் இன்று ....மூன்றுபேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!!!

தூத்துக்குடி மாவட்டம்: 03.08.2021

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுவெடிகுண்டு வைத்திருந்த ஒருவர் உட்பட கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில்  ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  நடவடிக்கை எடுத்தார்.



 தூத்துக்குடி காவல் ஆய்வாளர்கள் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் அவரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

 காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.


அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர்  கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப 




 1) தூத்துக்குடி நயினார்புரத்தை சேர்ந்த கொம்பையா மகன் யமஹா முருகன் (எ) முருகன், 2) மணப்பாடு லயன் தெருவை சேர்ந்த ஜோசப் மகன் ரூபன், 3) குரும்பூர் ராஜபதியைச் சேர்ந்த ரூபன் மகன் முத்துக்குமார்  ஆகிய 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 


அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட  காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள்  எதிரிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக