செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடி எல்லை காவல் தெய்வங்களாக முனிஸ்வரர், கருப்பசாமி சிலைகள் மற்றும் 150வருடம் பழமை வாய்ந்த ஸ்ரீ முச்சந்தி இசக்கி அம்மன் கோவில் இடிக்கும் முயற்சி ? ஸ்மார்ட் சிட்டி சாலை விரிவாக்கத்திற்காக தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை!!!

 தூத்துக்குடி அருள்ராஜ் ஹாஸ்பிட்டல் அருகில் 150வருடத்திற்கு மேலாக பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படும் ஸ்ரீ முச்சந்தி இசக்கி அம்மன் கோவில் மற்றும் அருகில் வீற்றிருக்கும்  தூத்துக்குடி எல்லை காவல் தெய்வங்களாக முனிஸ்வரர், கருப்பசாமி சிலைகளை தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் ஸ்மார்ட் சிட்டி பணி சாலை விரிவாக்கம் செய்வதற்காக இடிக்கப்போகிறோம் என04-08-2021 இன்று காலை 6:00 மணிக்குவந்திருந்தனர்.



காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளும் புல்டோசர் உடன் கோவிலை இடித்து தள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.. 



இத தகவல் அறிந்ததும் அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 அத்துடன் மாவட்ட பிஜேபி மா.செ மான்சிங், ரவிச்சந்திரன் மற்றும் இந்து முன்னனியினர் வந்ததும்....கோவில் இடிப்பு முயற்சி நிறுத்திவிட்டு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை இறங்கினார்கள்.

தொடர்ந்து இந்து கோவில்கள் மட்டுமே சாலை விரிவாக்கத்திற்கு இடித்து தள்ளப்பட்டு வருகிறது என  குற்றசாட்டு தெரிவிக்கிறார்கள். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக