தமிழன்டா இயக்கம் சார்பில் வன திருப்பதி ஆலய வளாகத்தில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசிப்பை காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும்விழா;மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பங்கேற்று வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா இயக்கம்,கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு நாலுமாவடி அருகில் உள்ள புன்னை நகர் வன திருப்பதி ஆலய வளாகத்தில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசிப்பை காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்புகொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி அருகே நாலுமாவடி பகுதியில் தமிழன்டா இயக்கம்,கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு நாசரேத் புன்னை நகர் வனதிருப்பதி கோவில் அருகே வைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை வழங்கி னார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேசுகையில்....
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பக்கத்து மாநிலங்களில் கொரோனா 3ம் அலை பரவ தொடங்கியுள்ளது.
அதனால் நம் மாநிலத்திலும் பரவக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரைக்கும் 7 நாட்கள் பொதுமக்களிடையே கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி நகரத்தில் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை சார்பாக நடைபெற்றது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இவை அனைத்தையும் நாம் கடைபிடித்து நாமே நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
![]() |
| தூத்துக்குடி S.P.ஜெயக்குமார் தமிழன்டா ஜெகஜீவனுக்கு சால்வை அணிவித்துே போது... |
இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் மற்றும் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Video பார்க்க....
இதில் தமிழன்டா கலைக்கூடம் மாநில செயலாளர் கதிர்வேல், மாநில பொருளாளர் பிரம்மராஜ், ஜேசுதாசன் , கலைக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் வனதிருப்பதி ஆலய மேலாளர் வசந்தன், நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராய்ஸ்டன், தங்கேஸ்வரன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக