தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றும் தீர்மானத்தை' நிறைவேற்ற வேண்டும் . திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்புத் தீர்மானத்தை இயற்றவேண்டும். தீர்மானத்தின் நகல் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படவேண்டும்.
சொந்த ஆதாயங்களுக்காக விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு ஸ்டெர்லைட் ஆலை சர்வ சுதந்திரமாகச் சூழலைச் சீரழிக்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்குத் தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தலைவர் வலியுறுத்தல் செய்தார்.
இதற்கு பின்பு தொடர்ந்து இதே
கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவு தர கோரி சந்தித்தனர்.
நாம் தமிழர் தலைவர் சீமானும் ஸ்டெர்லைட் ஆலை அகற்றும் சிறப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என டிவிட்டர் பதிவு பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
திமுக வரும் சட்டமன்ற கூட்டதொடரில் ஸ்டெர்லைட் ஆலை அகற்றும் சிறப்பு தீர்மானம் கொண்டு வருமா? என்பது அனைவரின் எதிப்பார்ப்பாக உள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக