வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

பொதுமக்கள் மகிழ்ச்சி !!!தூத்துக்குடியில் முத்துநகர் காய்கனி புது மார்க்கட் இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது!!! சமூகநலத்துறை அனமச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!



தூத்துக்குடி - துறைமுகம் நான்கு வழிச்சாலை அருகில் முத்துநகர் பனானா & விஜி டேபிள் பிரைவேட் லிமிடட்  சார்பில் புதியதாக முத்துநகர் காய்கறி புது மார்கெட் வளாகம் திறப்புவிழா தூத்துக்குடியில்  ஏராளாமான பொதுமக்கள் வருகையுடன்  20-08-2021 இன்று காலை 9.30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.



தலைமை தாங்கி 

புதிய மார்கெட் வளாகத்தை திறந்து வைத்தார்.

மாண்புமிகு P. கீதாஜீவன்

(சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளர்)

M.Com, B.Ed, MLA 


Video 



அடுத்து இந்நிகழ்ச்சியில்...

வரவேற்புரை: திரு,Rகுணசேகரன் 

தலைவர்முத்துநகர் காய்கனி புது மார்கெட்

வாழ்த்துரை : RevJ.சைமன் தர்மராஜ் 

CSI பவுலின் ஆலயம், மில்லர்புரம், தூத்துக்குடி

 பா. விநாயகமூர்த்தி 

தலைவர்-தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம்

 N.P. ஜெகன் பெரியசாமி

தலைவர் - தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம்





 SR. ஆனந்த சேகரன்

தூத்துக்குடி நகர செயலாளர் திமுக

. A. செந்தில் ஆறுமுகம் அவர்கள்

தலைவர்-தூத்துக்குடி மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்

.ஆடிட்டர்.K. சுயம்புராஜன் 

துணைத்தலைவர் - இருவப்பபுரம் விவசாயிகள் சங்கம்

.S.A. மதுக்குமரன் 

ஏற்றுமதியாளர் - சென்னை, தூத்துக்குடி

.D. சின்னதங்கம் அவர்கள்

செயலாளர் - முத்துநகர் காய்கனி புது மார்கெட்

நன்றியுரை : . P. ஜெபர்சன் சாமுவேல்ராஜ் 

பொருளாளர் - முத்துநகர் காய்கனி புது மார்கெட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.




தூத்துக்குடியில் புதியதாக காய்கனி மார்க்கெட் பற்றி நிர்வாகிகள் தெரிவித்தாவாவது:-

   தூத்துக்குடி மாநகரில் புதிய துறைமுகம் பைபாஸ் ரோடு மேம்பாலம் அருகே பிரமாண்டமான காய்கனி மார்க்கெட் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. 'முத்துநகர் காய்கறி மார்க்கெட்' எனும் பெயரில் உள்ள இந்த புதிய மார்க்கெட் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 20-08 - 2021 வெள்ளிக்கிழமை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

          "தூத்துக்குடி மாநகர மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த, அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள, இந்த மார்க்கெட் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக 3 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கடையும் காற்றோட்ட வசதியுடன் கட்டப்பட்டு உள்ளது. வாகனங்கள் நிறுத்த இடவசதி, ஆண், பெண் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோருக்காக தனித்தனியே இலவச கழிப்பிட வசதி போன்ற அனைத்து இந்த மார்க்கெட்டில் உள்ளது. எப்போதும் தூய்மையாக இருக்கும் வகையில் குப்பைகள் போடுவதற்காக, பல இடங்களிலும் பிளாஸ்டிக் டிரம்கள் வைக்கட்டு உள்ளன. வாழைத்தார், வாழை இலை, தேங்காய் போன்ற அனைத்து வேளாண் பொருட்களும் இங்கு ஏலம் முறையில் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படும். காய்கறிகள் மட்டும் இல்லாமல், மளிகை உள்ளிட்ட பல்வேறு சாமான்களும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்கள்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக