தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருந்துவமனையில் இன்று (02-08-2021) காலை 9 மணி அளவில் குழந்தைகள் நலப் பிரிவில் தாய்ப்பால் வார விழா தொடங்கப்பட்டது .
தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு ஒரு கையேடு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் நேரு உதவி முதல்வர் கலைவாணி உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி மற்றும் செவிலியர் பள்ளி முதல்வர் செவிலியர் கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்.
அடுத்தாக தூத்துக்குடி பொதுமக்களுக்கு கைகழுவும் முறைகளைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
அதற்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவ நுழைவாயில் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி மருத்துவ குழுவினர் வந்தார்கள்..
பின்பு அங்கிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் அதில் இருந்த ஒருவரை அழைத்து செய்து காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது அவரும் செய்து காண்பித்தார் அதன்பின்பு முகக்கவசம் எப்படி அணிவது எப்படி அதை கழட்டுவது எப்படி அதை கழித்து ஒழிப்பது என்பது பற்றி விளக்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் டாக்டர் நேரு உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் டாக்டர் மரியம் பீவி மற்றும் சுகாதார ஆய்வாளர் இம்மானுவேல் செவிலியர் பள்ளி முதல்வர் மற்றும் செவிலியர்கள் பங்கு ஏற்றுக் கொண்டார்கள்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக