திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஆன்லைன் கல்வி ரேடியோ 1 முதல் 10 ம் வகுப்பு வரை பாடங்கள் கற்பித்தல் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக கோவில்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சொ.மங்களேஸ்வரி!!!

கல்வி தொலைக்காட்சியை தொடர்ந்து...மாணவ மாணவிகளுக்கு  ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் அனைத்து மாணவிகளையும் இணைத்து கற்பித்தல் பணியைத் தொற்று காலத்திலும் தொய்வின்றி செய்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியை  சொ.மங்களேஸ்வரி . இவர் ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியை. கோவில்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு


ஆன்லைன் கல்வி சேவை ரேடியோ பற்றி  அரசுப் பள்ளி ஆசிரியை  சொ.மங்களேஸ்வரி கூறியதாவது:-

இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ என்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி.


 இது கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும்  கார்த்திக் ராஜா என்பவர் அறிமுகப் படுத்திய ஆன்லைன் சேவை ஆகும். 


அரசுப் பள்ளி ஆசிரியை  சொ.மங்களேஸ்வரி 


இதில் 10  ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எனது பங்களிப்பாக 8,9 மற்றும் 10 வகுப்புகளுக்கும ஆங்கில பாடங்களை கற்பித்து வருகிறேன்.


 இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ மிக எளிதாக இயக்கக் கூடியது. மிகச் சிக்கனமானது. மலைப்பகுதிகளில் கூட கேட்க முடியும். மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படாத வகையில் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவுகிறது. 



1 முதல் 10 ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன. பாடங்கள் தவிர நற்சிந்தனை கருத்துக்கள், விடுகதைகள், வினாடி வினா, வினா விடை தொகுப்பு, தினம் ஒரு திருக்குறள், பாடப் புத்தக பாடல்கள், மின்மினிகள் மின்னும் நேரம் என பல்வேறு நிகழ்ச்சிகள் மாணவர் செயல்பாடுகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன. 



இதன் மூலம் கற்பித்தல் தொய்வின்றி நடைபெறுகிறது. காலை முதல் மாலை வரை அட்டவணைப்படி எல்லா வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 


மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியைப் பார்த்தும் ஆன்லைன் கல்வி ரேடியோ வைக் கேட்டும் கற்றலை மேம்படுத்த மாணவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள். தன்னிடம் பயிலும் அனைத்து மாணவிகளையும் இணைத்து தடையறக் கற்பிக்க இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ உதவிபுரிகிறது. 



தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து என் பங்களிப்பை வழங்க வாய்ப்பு அளித்த கார்த்திக் ராஜா அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.



நான் எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அத்தனையையும் பயன் படுத்தி என் மாணவிகளுக்கு கற்பித்தலை எச்சூழலிலும் தடையறக் கற்க உறுதுணையாக இருப்பது பேரின்பம் தருவதாக உள்ளது என்று கூறுகிறார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக