தூத்துக்குடி மாவட்டம் :30.07.2021*
தூத்துக்குடி நேசம் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பாக பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது 9 வயது மகனுக்கு கண் கண்ணாடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சித்ரா. இவர்களுக்கு 9 வயது மகன் உள்ளார்.
சித்ரா மற்றும் அவரது மகன் கண் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் மிகுந்த கஷ்டப்படும் மேற்படி மாற்றுத் திறனாளி தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள நேசம் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பாக கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
மேற்படி மாற்றுத் திறனாளியான சித்ரா மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் ஆகிய இருவருக்கும் இன்று (30.07.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கண் கண்ணாடிகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது நேசம் பவுண்டேசன் அறக்கட்டளையின் தலைவர் பரத், ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக