thoothukudileaks 30-07-2021
தூத்துக்குடியில் உலக நட்பு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகர எம்.ஜி,ஆர்.ரசிகர் பேரவை சார்பில் உலக நட்பு தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கெளரிசங்கர் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் தூத்துக்குடிமாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் நடந்தது.
அ.தி.மு.க. மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான ஆர்.சுதாகர் கலந்து கொண்டு 100 பேருக்கு 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கே.மிக்கேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கல்வி குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் முனியசாமி,மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச்செயலாளர் பொன்னம்பலம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் பி.சி.மணி, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நெப்போலியன், என்.ராமகிருஷ்ணன், இரா.குமாரவேல், பொஜனார்த்தன பாண்டி, அரிகரன், மற்றும் சுந்தர் சிங், கே. சேரந்தையன், பரமசிவன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவுரை முருகன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாநகர எம்.ஜிஆர் ரசிகர் பேரவை சத்யா இலட்சுமணன் சிறப்பாக செய்து இருந்தார்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக