வெள்ளி, 30 ஜூலை, 2021

நிறுத்தி விட்டு ஒட்டமெடுத்தது ஸ்டெர்லைட் ஆலை ? தூத்துக்குடி மக்கள் நிம்மதி!!!

கடந்த 2021  மே - ஜூன் - ஜூலை மூன்று மாதங்களாக கோவிட் 19 - ல் ஆக்ஸிசன் த ட்டுப்பாடு என்பதை முன்னெறுத்தி ஸ்டெர்லைட் ஆலையில் இலவசமாக ஆக்ஸிசன் தயாரித்து  தருவதாக  ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்றத்தில் வாக்குறுதி உடன் தயாரிப்புக்காக  மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறந்தது? பலத்த பாதுகாப்புடன் குழ கண்காணிப்பு உடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது.




ஸ்டெர்லைட் ஆலை திறந்து இயங்கியது தூத்துக்குடி மக்கள் பெரும் அச்சத்தையே ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில்.... ஜூலை 31-ல் அதன் 3 மாத கெடு முடிவடைகிறது.

மீண்டும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு வழிகளில் முயன்றது. தனது ஆதரவாளர்கள் வைத்து பேட்டி? அவர்கள் வளர்ச்சி விவாதம்??? (கூலியாட்கள்) சிலரை தெருக்களில் வைத்து  ஆர்பாட்டம்? பத்திரிக்கைகளுக்கும் வண்ண கலரில் விளம்பரமும் செய்து வந்தது.அது போக மாணவர்களுக்கு கல்வி தொகை உதவி திட்டங்கள் என விழாவும் ஒரு தரப்பு நடத்தி வந்து அதன் பெயரை பெரிசுபடுத்தினர் மறைமுகமாக சில அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்.



இவையெல்லாம் தூத்துக்குடி மக்கள் அனைவரும் வேடிக்கைப் பார்த்து மிக அமைதியாக எந்த ரியாக்க்ஷனும் தராததால் வெறுத்து போனார்கள் என்றே சொல்கிறாார்கள்.

தமிழக அரசிடம் கெஞ்சல்!!!

இந்நிலையில் ...?

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் 6 மாதம் அனுமதிக்க கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஸ்டெர்லைட் ஆலை மனு அனுப்பியது?


ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் 6 மாதம் அனுமதிக்க கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மனு கூறியிருந்தாவது ....

3வது அலை வர இருப்பதால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்பதால் மேலும் 6 மாதங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்கவில்லை. என்றதால் ஸ்டெர்லைட் ஆலை நொந்துபோனதாக தெரிவிக்கிறார்கள்.

அதன்படியே ....

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் ஏற்பட்டது.


உச்சநீதிமன்ற உத்தரவின் படி நாளையுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் பணியில் இன்று 30-07-2021 முடித்தது. 


ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு அனுமதியை 6 மாதத்துக்கு நீட்டிக்குமாறு வேதாந்தா நிறுவனம் மனு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.


போதிய கையிருப்பு உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்து விட்டது.



தற்போதைக்கு தமிழக அரசு தூத்துக்குடி மக்களுக்கு நிம்மதி தந்ததுள்ளது  என்கிறார்கள். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக