வெள்ளி, 30 ஜூலை, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ...தூத்துக்குடி எம்.பி.கனிமொழி ட்விட் பதிவு!!!.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு நன்றி: கனிமொழி எம்.பி.



ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு நன்றி என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம்நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், கால நீட்டிப்பு கேட்டு வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.



இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி கால அவகாசம்நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவிப்பதாகதிமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.


தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ்நாடு அரசின் முடிவிற்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக