சனி, 24 ஜூலை, 2021

திமுக அமைச்சர் கே.என்.நேரு வருகை திடீர் போக்குவரத்து நிறுத்தம்....ஏன் இந்த டாம்பீகம் ? தூத்துக்குடி மக்கள் கேள்வி?

thoothukudileaks 24-07-2021

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தான ஆய்வுக்க காக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு. இன்று 24-07-2021 காலை தூத்துக்குடி வருகை வந்தார். அவருடன் மாவட்ட அமைச்சர்கள அனிதா ராதாகிருஷ்ணன் - கீதாஜீவன்-மற்றும் எம் எல்.ஏ -க்கள் மார்க்கண்டேயேன் , சண்முகய்யா ஆகியோர் வந்திருந்தார்கள்.



 தூத்துக்குடி மாநகர் முழுவதும் இரு மாவட்ட அமைச்சர்கள்  ஏனோ? அதிக அளவு போட்டி போட்டு வாஸ்போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தார்கள். இன்றைய நாளிதழ்களில் பலவற்றிலும் வண்ண கலரில் பக்கம் பக்கமாய் விளம்பரம் செய்திருந்தார்கள்.


 ஸ்மார்ட் சிட்டி திட்டமான தூத்துக்குடி பழைய பஸ் நினலயத்தில எழும்பிவரும் பேருந்துநிலைய கட்டியிட பணிகளை பார்வையிட வந்தார். 


இதனால் அப்பகுதியில் சுமார் முக்கால்  மணி நேரம் அமைச்சர் வருவதால் ...?



 பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் தூத்துக்குடி பழைய நிலையப் பகுதியில் போக்குவரத்து நிறுத்திவைத்தார்கள். 


பல பேருந்துகள் வழியில் நிறுத்துப்பட்டு பயணிகள் நடந்து செல்ல கட்டாய படுத்தப்பட்டனர். நிறுத்தபட்ட வண்டிகள் 3ம் கேட் பாலம் வரை நீடித்தது.


 தூத்துக்குடி மாவட்ட எம்.பி.கனிமொழி மற்றும் மற்ற அமைச்சரகள் வருகையின் போது கூட  இல்லாத அளவு போக்குவரத்து கெடுபிடி உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு வருகையின் இருந்தது. 

இத னால் அப்பகுதியில் ரொம்ப அவதியுற்ற தூத்துக்குடி பொதுமக்கள் முகம் சுளித்து சென்று கொண்டிருந்தார்கள் ..  

ஏன் இந்த டாம்பீகம்???




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக