வெள்ளி, 23 ஜூலை, 2021

நீண்டகாலமாக பல பெண்களுக்கு வாட்ஸ்அப்-ல் பலான படம் அனுப்பி செல்போனில் செக்ஸ் டார்ச்சர் பண்ணி வந்த மர்ம ஆசாமி யார் தெரியுமா ? தூத்துக்குடி காவல்துறை விரித்த வலையில் வசமாக சிக்கினான் கட்டியிட வேலை செய்யும் சைக்கோ கொத்தனார் ?




தூத்துக்குடி மாவட்டத்தில் பல பெண்களுக்கு செல்போனில் ஆபாச மான வார்த்தைகளில் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் வந்தது. இதுதொடர்பாக சை பர்கிரைம் டிரெஸ்செய்தும் அடிக்கடி சிம் மாற்றி இளம்பெண்களின் செல்போன் நம்பர்களை தேர்ந்தெடுத்து செக்ஸ் டார்ச்சராக  ஆபாசமாக   பே சி வந்தான் மர்ம ஆசாமி?

அவன் யார்? எங்கு இருக்கறான் என தெரியாமல் இருந்தது இது குறித்து சமீபத்தில ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜெய க்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வலைவிரித்தது.

அதில் இதுவரை  சிம்கார்டு மாற்றி தப்பிவந்த  கூட்டாம்புளியைச் சேர்ந்த கொத்தனார் பிடிபட்டான்.

அவனை மிக சாமர்த்தியமாக கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார் .

இதுபற்றிய செய்தியாவது:-

thoothukudileaks - 23 - 07 - 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் ஆபாசமாக பேசியும், புகைப்படங்கள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார். 


அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  மேற்படி பாலியல் தொந்தரவு செய்து வருபவர் யார் என விரைந்து கண்டுபிடித்து கைது செய்யுமாறு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் அவருக்கு உத்தரவிட்டார்.  

அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன்  மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுதாகர் மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில்  பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனில் ஆபாசமான வார்த்தைகளில் பேசியும், புகைப்படங்கள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு செய்து வந்தவர் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கொத்த வேலை செய்து வரும் செல்லப்பாண்டி மகன் கிருஷ்ணவேல் (32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


 இவர் இதுபோல பல பெண்களின் செல்போன் எண்களை எடுத்து, அவர்களது செல்போனில் அவர்களிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. 


இவர் இவ்வாறு செல்போன்களில் பேசிவிட்டு, பிடிபடாமல் இருப்பதற்காக வேறு புதிய நம்பரை மாற்றிக் கொள்வது போன்ற சில செயல்களின் மூலம் போலீசாரின் பிடியில் சிக்காமலே இருந்து வந்தார். சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில் நுட்ப ரீதியாக ஆராய்ந்து இவர்தான் பாலியல் தொந்தரவு செய்தார் என கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.


 மேலும் அவன் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை  பறிமுதல் செய்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப ரீதியாக பல வழிமுறைகளை கையாண்டு சம்மந்தப்பட்ட குற்றவாளியை  கைது செய்தனர் சைபர் குற்றப்பிரிவு போலீசார்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தாவது...

அந்நிய நபர்களிடமிருந்து ஆபாசமாக வரும் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ் ஆப் செய்தி, ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றிற்கு பெண்கள் எவ்வித பதிலும் அளிக்க வேண்டாம். 


அவர்களது எண்களை பிளாக் செய்து விட்டு, காவல்துறைக்கு புகார் அளிக்கவும். இதுபோன்ற தவறு செய்பவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்காக தனியாகவே சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. 


இவ்வாறு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பெண்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் புகார் அளிக்கலாம் அவர்களது பெயர் மற்றும் முகவரி இரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக