வியாழன், 22 ஜூலை, 2021

சாத்தான்குளம் தெருவில் நடந்து சென்றவரை வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சி !!! ஒருவர் கை து

தூத்துக்குடி மாவட்டம் : 22.07.2021

thoothukudileaks

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தெருவில் நடந்து சென்றவரை....  வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வர் கைது செய்யப்பட்டார்.



சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் முருகன் (42). இவருக்கும் இவரது உறவினரான கிருஷ்ணன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் இசக்கிமுத்து (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் முருகன் இசக்கிமுத்து வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.


இதனையடுத்து நேற்று (21.07.2021) சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெரு அருகே வந்து கொண்டிருந்த முருகனை வழிமறித்து இசக்கிமுத்து தவறாக பேசி கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து முருகனின் உறவினரான கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் சிவபெருமாள் (31) அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர். பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக