வியாழன், 22 ஜூலை, 2021

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெர்மல் நகர் ஐக்கிய வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் கொரானா தடுப்பூசி!!!

கோயில்பிள்ளை நகர் அபிவிருத்தி சங்கம்  மற்றும்தெர்மல் நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் இணைந்து  இன்று 22.07.2021 - வியாழக்கிழமை

தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம்  கொரானா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையொட்டி 4 வது தெரு, மேற்கு உள்ள கோயில் பிள்ளை நகரில் அமைந்துள்ள அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் ...நேரம் :  காலை 10 மணி முதல் மதியம்  1 மணி வரை மருத்துவர்கள் குழ வுடன் தடுப்பு ஊசி  போடும் பணி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் இதுவரை தடுப்பூசி போடாத உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும்  ஆர்வத்துடன் வந்து கொரானா தடுப்பு ஊசி செலுத்திக்  கொண்டார்கள்.

நாளை 23.07 - 2021 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி நகர மத்திய சங்க  வியாபாரிகளுக்கு

தூத்துக்குடி DA திருமண மண்டத்தில் காலை 9 மணி முதல் கொரனா தடுப்பூசி   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..  

முக்கிய குறிப்பு: மருத்துவர்கள் உடன் வருகிறார்கள். சந்தேகம் இருப்பவர்கள் அவர்களிடம் விபரங்கள் கேட்டு தெளிவு பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக