தூத்துக்குடி மாவட்டம் : 31.07.2021
thoothukudileaks 6.30 PM
கோவில்பட்டி நாரைக்கிணறு N. புதூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ் செல்வன்(45) அவரது மனைவி உலகாண்ட ஈஸ்வரி (40). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதை அறிந்த கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் (44) தான் ஒரு ஜோசியர் என்று மேற்படி தம்பதியினரிடம் அறிமுகமாகி பரிகார பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறி கடந்த 14.04.2021 அன்று அவர்களது 6 ½ பவுன் தங்க நகைகளை வைத்து பரிகாரபூஜை செய்துள்ளார்.
பின்னர் தங்க நகைகளை திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து உலகாண்ட ஈஸ்வரி கடந்த 15.06.2021 அன்று அளித்த புகாரின் பேரில் நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ....?
மேற்படி ஜோசியர் முத்துராமலிங்கம் இதற்கிடையில் கடந்த 08.06.2021 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இதேபோன்று பலரை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் ஜோசியர் அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடியவர் என்பதால் முத்துராமலிங்கம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நாரைக்கிணறு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் தர்மர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் இ.ஆ.ப கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நாரைக்கிணறு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் தர்மர் ஜோசியர் முத்துராமலிங்கத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக