தூத்துக்குடி லீக்ஸ் : 24.07.2021
ஏழை, எளிய மக்களுக்கு வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரானா காலத்தில் உணவு வழங்கிய 50 ஊர் இளைஞர்களின் சமூக சேவை வல்லநாடு தம்பிராட்டி மஹாலில் நல்ல சமூக பணி செய்த இளைஞர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு !!!!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா தொற்று தீவிரமாக இருந்த கால கட்டங்களில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிய 50 ஊர் இளைஞர்களின் சமூக சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (24.07.2021) வல்லநாடு தம்பிராட்டி மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசியதாவது:-
உங்கள் பகுதி அமைதியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் நீங்கள்தான், சமூகத்தில் மிகச் சிறப்பான பணி செய்து கொண்டிருக்கிறீர்கள்....
இதே போன்று நீங்கள் எப்போதும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும், இளைஞர்களாகிய நீங்கள் இந்த சமூக பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் இளைஞர்கள் தான் நாளைய வருங்கால தூண்கள், இளைஞர்கள் போதை பழக்க வழக்கத்திற்கு அடிமையாவது, செல்போன் பயன்பாட்டை தேவையில்லாமல் தவறாக பயன்படுத்துதல் போன்ற தீய பழக்க வழக்கங்களை தவிர்த்து நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் சிந்திந்து செயல்பட வேண்டும், இது போன்ற நல்ல சமூக பணி செய்த இளைஞர்கள் வருங்காலத்தில் சிறந்த சமூதாயத்தை உருவாக்கி சிறந்தவர்களாக திகழ வேண்டும்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவன், திரு. முத்துராமலிங்கம், சித்த மருத்துவர் செல்வக்குமார் மற்றும் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக