செவ்வாய், 27 ஜூலை, 2021

100 - ஜ தாண்டி சதமடித்தது ....தூத்துக்குடி மாவட்ட காவல்துறை!!! 2021-ம் ஆண்டில் இதுவரை? குண்டர் தடுப்பு பிரிவில் கைதுகள் 100 ஆக உயர்வு!!!

தற்போது  ஜூனல 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதுவரை 100 பேர் குண்டர் தடுப்பு பிரிவில் கைது சிறைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்


இந்த ஆண்டு இதுவரை கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 74 பேர், போக்சோ வழக்குளில் சம்மந்தப்பட்டவர்கள் 13 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர், மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர், விபச்சார வழக்கில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளி ஒருவர் என மொத்தம் 100 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக