செவ்வாய், 27 ஜூலை, 2021

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன முழக்க போராட்டம்!!!

 திமுக தேர்தல்காலத்தில் தெரிவித்த  வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடி தெற்கு  மாவட்ட அ.தி.முக.சார்பில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.



திமுக  அரசின் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக விடியல் அரசை கண்டித்து....தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.முக.சார்பில் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 28-07-- 2021 காலையில் 10 மணியளவில் நடை பெற்றது.

   கழக இனை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,. கழக ஒருங்கினைப்பாளரும், துனை முதல்வருமான ஒபன்னீர்செல்வம் ஆகியோர் ஆணையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விடியல் அரசின் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

  


  தூத்துக்குடி மாவட்டம்ஸ்ரீவைகுண்டம் தொகுதி பண்டாரவிளையில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க.செயலளாருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.

   மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர திருப்பாற்கடல்,ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், மாமட்ட அமைப்புசாரா ஒட்டுநர் அணி பாஸ்கர், பால்துரை , வேதமாணிக்கம், இப்ராஹிம்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

     தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

   ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட மாணவரணி செயலாளாபில்லா விக்னேஷ், வழக்கறிஞர் அணி சரவணன், தகவல் பிரிவு சகாயராஜ், மற்றும் வக்கீல் செங்குட்டுவன், ரமேஷ் கிருஷ்ணன், மணிகண்டன், முரளி, ராமச்சந்திரன், கிஸோகுமார். பரிபூரணராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக