சனி, 6 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி மாவட்டம் முத்து கருப்பன கல்வி நிலையம் ....விடுதி மாணவர்களை கொத்தடிமை பணியாளர்களாக பயன்படுத்தியதா? மாணவர்களின் புகாரை தொடர்ந்து நீதிமன்ற பணிக்குழுவினர் அதிரடி ஆய்வு!!!.

 விடுதி மாணவர்களை கொத்தடிமை பணியாளர்களாக பயன்படுத்திய அரசு உதவி பெறும் கல்வி நிலையம்.

மாணவர்களின் புகாரை தொடர்ந்து நீதிமன்ற பணிக்குழுவினர் ஆய்வு. நடைபெற்றது.



தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை அருகே உள்ள சில்லாநத்தத்தில் அமைந்துள்ள முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளையானது  அரசு உதவியுடன் பிரைமரி வகுப்பு முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான கல்வி நிலையமாக இயக்கி வருகிறது.


அரசு உதவிபெறும் முத்துக்கருப்பன் நினைவு கல்வி நிலையங்களில் சுமார் நான்காயிரத்திருக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றர். மேலும் இக்கல்வி நிலையத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆதரவற்ற மாணவ மாணவியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்



இவ்வாறு ஆதரவற்ற நிலையில் பயின்று விடுதிகளில் பயின்று வரும் பள்ளி மாணவர்களை கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளுக்கு தொடர்ந்து ஈடுபடுத்தி வந்தததோடு தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு மாணவர்களை கொத்தடிமையாக ஈடுபடுத்தி வந்ததை தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று 06.02.2021 அன்று காலை முதல் மாவட்ட  சமூக நல பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய அறிவுறுத்தலின் படி வழக்கறிஞர்கள் குழு மற்றும் சமூக அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை அருகே உள்ள சில்லாநத்ததில் இயங்கி வரும் முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இப்படிக்கு...

அக்ரி பரமசிவன்.

(சமூக செயற்பாட்டாளர்)

தூத்துக்குடி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக