திங்கள், 11 ஜனவரி, 2021

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது!!!

தூத்துக்குடி லீக்ஸ் : 12.01.2021

தூத்துக்குடி  மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் இரட்டை கொலை மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி ஜெயமுருகன் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் - சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் பாராட்டினார்



  கடந்த 25.03.2020 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி, தம்பிக்கை மீண்டான் மறவன்மடத்தைச்  சேர்;ந்த வீரபெருமாள் மகன் ஜெயமுருகன் (45) என்பவர், தனது கூட்டாளிகளுடன்  தளவாய்புரம் மாப்பிள்ளையூரணி பகுதியில உள்ள ஒரு வீட்டில் ஒருவரை வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வெகுண்டுகள் வெடித்து அந்த வீடு மற்றும் அப்பகுதியை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.  இவ்வழக்கில் இவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர், இவர் இவ்வழக்கில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

அதே போன்று கடந்த 09.11.2014 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இவர் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.03.2016 அன்று திருநெல்வேலி சுரண்டை இடையார்தவனையைச் சேர்ந்த மாடசாமி மகன் ஆறுமுகச்சாமி (32) மற்றும் பழையகாயல் ரட்சண்யபுரத்தைச் சேர்ந்த அய்யாக்குட்டி மகன் கண்ணன் (50) ஆகிய இருவரையும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மேற்படி ஜெயமுருகன் இரட்டைக்கொலை செய்த வழக்கில் ஈடுபட்டுள்ளார்.


அதே போன்று கடந்த 09.11.2014 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  ஒருவரை அரிவாளால் தாக்கிய வழக்கிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் முத்தையாபுரம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்  கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார்.


 இந்நிலையில் நேற்று (11.01.2021) காலை மடத்தூர் அருகில் தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த ஒருவரை பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளார். 

மேலும் அப்பகுதியில் அரிவாளை சுழற்றி அசிங்கமான வார்த்தைகளில் பேசி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளார். 

இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல்நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் காவர்கள் ராஜசேகர், ஜெயப்பிரகாஷ், ஃபிரட்ரிக் ராஜன, காசி ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் மேற்படி எதிரி ஜெயமுருகனை  நேற்று கீழஈராலில் வைத்து கைது செய்தனர்.


ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டைக் கொலை மற்றும் பல்வேறு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு போன்ற பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி ஜெயமுருகனை கைது செய்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக