அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி திருச்சிக்கு வருகை தந்த போது தமிழக அரசுக்கு மிக முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.
நமது பாரத நாட்டில் தமிழகம் மட்டும் தான் மிக அதிகமான பழமை வாய்ந்த மற்றும் பிரத்திப்பெற்ற பல ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் உள்ளது.
இவ்வாறு வரலாறு மிகுந்த நம்ம தமிழகத்தில் வாழ்கின்ற ஒட்டு மொத்த இந்துக்களின் பல ஆண்டு கோரிக்கைகளான தமிழகத்தில் கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வருமானம் இன்றி உள்ள அனைத்து திருக்கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டுமெனவும் , மேலும் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெய்வங்களுக்கு திருக்கோயில்களை கட்டி தரும் முழு பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டுமெனவும் , கயிலை யாத்திரை செல்லக் கூடிய இந்து சமயத்தை சார்ந்த அனைத்து பக்தர்களுக்கும் நிதி உதவிகளை வழங்கிட உடனடியாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுமென என தமிழக அரசை ஒட்டு மொத்த இந்துகளின் சார்பாகவும் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக