சனி, 9 ஜனவரி, 2021

தூத்துக்குடியில் வருகின்ற ஜனவரி 14 ல் தூத்துக்குடிசிதம்பர நகர் சந்தை வளாகத்தில் உள்ள தமிழன்டா கலைக்கூடத்தில் காலை 7 மணிக்கு பொங்கல் விழா!!! கலைகளை வளர்க்க ஆர்வமுள்ள கலைஞர்கள் – பயிற்சியாளர்கள் தொடர்பு கொள்க என.. ஒருங்கிணைப்பாளர் நாட்டுப்புறப்பாடகர் செ.ஜெகஜீவன் அறிவிப்பு!!! அனைவருக்கும் பயிற்சி இலவசம்!!!

தூத்துக்குடியில் அனைத்து கிராமியக்கலைகளும் இலவசமாக கற்றுத்தரப்படும் – உடன் முன்பதிவு செய்து கொள்ளுமாறு  தூத்துக்குடி. ஒருங்கிணைப்பாளர் நாட்டுப்புறப்பாடகர் செ.ஜெகஜீவன் அறிவிப்பு செய்துள்ளார். 


இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி லீக்ஸ் 2021 ஜனவரி 10; தூத்துக்குடியில் வரும் தை பொங்கல் 01ம் தேதி தமிழன்டா கலைக்கூடம் நடத்தும் தமிழ் கிராமியக்கலைப் பயிற்சி நடைபெற இருக்கிறது. 

தூத்துக்குடியில் வருகின்ற 14ஆம் தேதி தை 1ஆம் தேதி பொங்கல் நாள் அன்று தூத்துக்குடி சிதம்பர நகர் சந்தை வளாகத்தில் உள்ள தமிழன்டா கலைக்கூடத்தில் காலை 7 மணிக்கு பொங்கல் விழா விழா நடைபெறுகிறது. அப்பொழுது தாரை தப்பட்டை முழங்க விழா நடைபெறும். 

                  இந்த விழாவிற்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறார்கள்.

முன்பதிவு செய்ய  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

ஜனவரி 14 பெரங்கல்அன்று சிலம்பாட்டம், தப்பாட்டம்,ஒயிலாட்டம்,கோலாட்டம்,களியலாட்டம்,வீதி நாடகப் பயிற்சி,கரகம்,காவடி,  கிராமிய நையாண்டி பற்றி சிலம்பு செல்வம்,மேகலிங்கம் போன்றோர் பயிற்சி வழங்குகின்றனர்

.மாரி பறையாட்டம் கற்றுக்கொடுக்கிறார்

.சிலம்பம் கலையை மாரியப்பன் கற்றுக்கொடுக்கிறார்.

யோகா கலையை சுந்தரவேல், பாக்ஸர் லெட்சுமண மூர்த்தி பாரம்பரிய கலையை கற்றுக்கொடுக்கிறார். 

 பல்வேறு பயிற்சிகள் நடைபெறுகிறது.  அனைத்து கிராமியக்கலைகளும் இலவசமாக கற்றுத்தரப்படுகிறது 

கலைகளை வளர்க்க ஆர்வமுள்ள கலைஞர்கள் – பயிற்சியாளர்கள் தொடர்பு கொள்ளவும்… இடம்: தமிழன்டா கலைக்கூடம், சிதம்பரநகர் சந்தை வளாகம், தூத்துக்குடி. ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண் ;  நாட்டுப்புறப்பாடகர் செ.ஜெகஜீவன் ;

97917 80068 ;வாட்ஸாப் எண் ;98650 97664



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக