திங்கள், 28 டிசம்பர், 2020

தூத்துக்குடி ஏரல் அருகே பண்டாரவிளையில் ஒருவர் அடித்துக் கொலை!!! இதுதொடர்பாக 16 மணி ேநரத்திற்குள் இருவர் கைது!! துரிதமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு!!!

தூத்துக்குடி லீக்ஸ் 28.12.2020


ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரவிளை பகுதியில் நேற்று நடந்த கொலை வழக்கில் - சம்மந்தபட்ட எதிரிகள் இருவர் 16 மணி நேரத்தில் கைது - எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.



 தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஞானையா மகன் செல்வகுமார் (எ) செல்லகுட்டி(37). இவருக்கும் பண்டாரவிளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த துரைப் பாண்டி மகன் பட்டுப்பாண்டி (35) என்பருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் நேற்று (27.12.2020) இரவு செல்வகுமார் (எ) செல்லகுட்டி மற்றும் அவரது சகோதரர் ஆரோன் (40) ஆகியோர் பண்டாரவிளையில் உள்ள மேலபனங்காடு பகுதியில் மது அருந்தி கொண்டிருக்கும்போது, அங்கு வந்த பட்டுபாண்டி மற்றும் அவரது சகோதரர் அருண்குமார் (எ) பெருமாள் (18) ஆகியோர் செல்வகுமார் (எ) செல்லகுட்டியை இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வகுமார் (எ) செல்லகுட்டி உயிர் இழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஏரல் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மேற்பார்வையில், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முருகபெருமாள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் எதிரிகளான பட்டுபாண்டி மற்றும் அருண் குமார் (எ) பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். 

கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக செல்வகுமார் (எ) செல்லகுட்டியை கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.

மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் பாராட்டினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக