தூத்துக்குடி லீக்ஸ் :13.11.2020*
தூத்துக்குடி தட்டாப்பாறை காவல் நிலையப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!!!
தட்டாப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் 12.11.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கீழ செக்காரகுடி, வங்கி முன்பு,கீழசெக்காரகுடி, வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் ஆதிமூலபெருமாள் (57) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தட்டாப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் வழக்கு பதிவு செய்து ஆதிமூலபெருமாளை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 49 மதுபாட்டில்களும், இரு சக்கர வாகனமும், ரூ. 2,000/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக